ஜம்மு காஷ்மீர் எந்த அச்சமும் இல்லாமல் செல்லும் சூழலை பாஜக உருவாக்கி இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, உதம்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் லால் சவுக் பகுதிக்கு யாரும் அச்சமின்றி செல்ல முடியாத சூழலை பாஜக உருவாக்கி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
“2014 முதல், எஸ்சி, எஸ்டி, தலித்துகள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அயராது உழைத்து வருகிறோம்.
நாங்கள் எங்கள் எல்லைகளைப் பாதுகாத்து, எங்கள் சகோதர சகோதரிகளுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தோம். ஆனால் காங்கிரஸுக்கு உங்களைப் பற்றிக் கவலையில்லை, அப்துல்லாக்களுக்கு உங்களைப் பற்றிக் கவலையில்லை. இதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்
ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவு 370ஐ ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் வாரிசுகள் மற்றும் உறவினர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் என்றும் அமித் ஷா கூறினார்.
Discussion about this post