சாலைப் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். தமிழகத்தில் 35 நெடுஞ்சாலைகளில் 1031 கி.மீ., திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலைகள் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுடனான தொடர்பை வலுப்படுத்துவதோடு, தமிழகத்தை பொருளாதாரத்தில் மேலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய்தம்தா, அமைச்சர் எவ.வேலு மற்றும் துறை சார்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டதாக மத்திய இணை அமைச்சர் எச்.டி.மல்ஹோத்ரா எல்.முருகன் தெரிவித்தார்.
Discussion about this post