ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா வெற்றி பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிடிபி வேட்பாளர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி பிஜ்பெஹாராவில் தோல்வியடைந்தார்.
பட்காம் மற்றும் கந்தர்பால் தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா இரு இடங்களிலும் வெற்றி பெற்றார். பட்காம் தொகுதியில் 36 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் 17 ஆயிரத்து 525 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
மற்றொரு தொகுதியான கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா 10,574 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் 22,153 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், மெகபூபா முப்தியின் மகளுமான இல்திஜா முப்தி, பிஜ்பெஹாரா தொகுதியில் தோல்வியடைந்தார். இல்திஜா முப்தி 23 ஆயிரத்து 529 வாக்குகள் பெற்று 9,770 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அனந்த்நாக் மேற்கு தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அப்துல் மஜித் வெற்றி பெற்றார். 25 ஆயிரத்து 135 வாக்குகள் பெற்று சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கிஸ்த்வார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் சகுன் பரிஹார் மொத்தம் 29 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரை 521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜவாத் ஹசன் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 2வது இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் 5 இடங்களைப் பெற்று பரிதாபமாக தோல்வியடைந்தனர்.
Discussion about this post