காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
காஷ்மீரில் 10 ஆண்டுகள் புதிய ஆட்சிக்கு பிறகு, காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் அருகே உள்ள காட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டனர்.
ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொருவரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனந்த்நாக் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post