2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவை விரைவுபடுத்தும் கதி சக்தி திட்டத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கதி சக்தி திட்டம் 2021 இல் தொடங்கப்பட்ட நிலையில், இந்தத் திட்டம் இப்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அரசு, கதி சக்தி என்ற அற்புதமான முயற்சியின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
கதி சக்தி திட்டம் பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளும் மற்றும் வளர்ச்சியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post