காங்கிரஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.
கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், தற்போது அந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, போலி வாக்குறுதிகளை அளிப்பது எளிது; அதை செயல்படுத்துவது கடினம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
செயல்படுத்த முடியாதது என்று தெரிந்தும் மேடைகளில் வெற்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தற்போது மக்கள் முன் காங்கிரஸ் அம்பலமாகி நிற்கிறது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நிதி நிலைமை மோசமாகிவிட்டதாக அந்த அறிக்கையில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
Discussion about this post