2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் கடிதம் அனுப்பியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்தது.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இந்தியாவில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது.
(அடுத்து) இதற்கிடையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நாடுகள் இரட்டை இலக்கத்தில் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.