உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமாக விளங்கும் மெட்டா, தனது பயன்பாடுகளில் புதிய அம்சங்களை தொடர்ந்து இணைத்து வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற முன்னணி சமூக ஊடக தளங்களை நிர்வகிக்கும் மெட்டா, இந்தியாவில் மட்டும் 35 கோடி பேஸ்புக் பயனர்களையும், 50 கோடி வாட்ஸ் அப் பயனர்களையும் கொண்டுள்ளது.
இதற்கமைய, இன்ஸ்டாகிராமில் பலருக்கும் பிரியமான ஒரு அம்சமான ‘ஸ்டேட்டஸில் பாடல்களை சேர்த்தல்’ வசதி, தற்போது வாட்ஸ் அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்களது மனநிலைக்கு ஏற்ப பாடல்களைத் தேர்வு செய்து, ஸ்டேட்டஸில் பதிவுசெய்யலாம். இந்த புதிய அம்சம், சமூக ஊடக பயன்பாட்டை இன்னும் அபிவிருத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மெட்டாவின் புதிய புதுப்பிப்பு, வாட்ஸ் அப் பயனர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகவும், இது சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கிணங்க விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்போகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.