புனேவில் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனேவின் உரவாடே பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று மாலை தீ விபத்து. எஸ்விஎஸ் ஆகுவா டெக்னாலஜி என்ற தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தொழிற்சாலையில் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உள்ளே 20 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குளோரின் டை ஆக்சைட் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்ட வந்த நிறுவனம் ஆகும்.
இங்கு தற்போது போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீயணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மீட்பு பணியில் இதுவறை 18 உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. உள்ளே சிக்கலான இடங்களில் பலர் சிக்கி இருப்பதாலும், கெமிக்கல் தொழிற்சாலை என்பதாலும் மீட்பு பணிகள் தாமதம் ஆகியுள்ளன.
தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து புகார் அதிகமாக வருவதால் அருகில் குடியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர தீ விபத்து பலியானோர் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post