எந்த பேச்சுக்கும் இடமில்லை மத்திய அரசு நடவடிக்கை இந்தியாவில் ஒரே சமூகவலைத்தளம் மட்டுமே…! There is no room for any talk Central Government Action is the only social networking site in India …!
இந்தியா ஒருபோதும் இறையாண்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டிவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் புதிய டிஜிட்டல் கொள்கை தொடர்பாக சட்டரீதியான மோதல் தொடங்கியுள்ள நிலையில் அரசின் புதிய சட்டங்களை ஏற்காவிட்டால் தடைவிதிக்கப்படும் என்று எச்சரித்து டிவிட்டருக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்தியாவில் தொழில் புரியும் சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றார்.சமூக ஊடகங்கள் வழியாக அவதூறு தவறாகப் பயன்படுத்துதல் ஏய்த்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கவே சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அதன் ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் யாரும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார், ட்விட்டர் நிறுவனம் சமூக வலைத்தளம் என்பதை தாண்டி அரசியலில் தலையிடுவது, உள்ளூர் போராட்டங்களை ஊக்குவிப்பது மேலும் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் நபர்களை தூண்டிவிடுவது என பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாக உலகம் முழுவதும் பரவலாக குற்றம் சுமத்த படுகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் கணக்கை திட்டமிட்டு ட்விட்டர் நிறுவனம் முடக்கியதும், டிரம்ப்பிற்கு எதிராக செயல்பட வியூகம் வகுத்ததாக கூறப்படும் நிலையில், இந்தியாவிலும் ட்விட்டர் தனது வேலையை காட்டலாம் என்பதால் இப்போதே மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விதிகள் மூலம் ட்விட்டர் இந்திய சட்டத்திற்கு மட்டுமே இந்தியாவில் கட்டுப்பட்டு செயல்பட முடியும் ட்விட்டர் மட்டுமல்லாமல் இனி இந்தியாவில் பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படும் ஒரே சமூகவலைத்தளங்களாக செயல்படும் என்பதில் மாற்றம் இல்லை.
ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசின் புதிய சட்டத்தை ஏற்கவிட்டால் சீனா செயலிகளை தடை செய்தது போல் விரைவில் இந்தியாவில் தடை செய்ய படலாம் எனவும் கூறப்படுகிறது.
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post