பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் என கருதப்படும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை, ஜி – 7 அமைப்பில் இடம் பெற்றுள்ளன.ஜி – 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், பிரிட்டனில், வரும், 11 – 13ல் நடக்க உள்ளது. அதற்கு முன், இந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடந்துள்ளது. இதில், ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதியும் பங்கேற்றார்.அமேசான், கூகுள் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக பல நாடுகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சர்வதேச அளவில் சீரான வரி விதிப்பு முறை குறித்து, நிதியமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதன்படி, இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படும் நாடுகளில், குறைந்தபட்சம், 15 சதவீத ‘கார்ப்பரேட் டேக்ஸ்’ எனப்படும் வர்த்தக வரியை செலுத்த வேண்டும்.மேலும், இந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை, அது செயல்படும் நாட்டில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக வரி குறைந்த நாடுகளில் இந்த நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டை குவிப்பதை தடுக்க முடியும்.இதற்கிடையே, ”வரும், 2022க்குள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, ஜி 7 நாடுகளின் தலைவர்களை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வற்புறுத்தி உள்ளார்.
Discussion about this post