சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (vi) ப்ரீபெய்ட் கட்டணங்கள் இந்தியா முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் BSNL இப்போது கூட மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. இது தவிர 45 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.
பிஎஸ்என்எல் இன்னும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கவில்லை. அதாவது பிஎஸ்என்எல் நாட்டின் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் அடுத்த மாதம் நாடு முழுவதும் தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். அதாவது BSNL அதிக டேட்டா நன்மைகளுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பாருங்கள்.
பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த BSNL ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் செய்தால், மொத்தம் 168GB டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
அதன்படி, இந்த பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த அற்புதமான BSNL ப்ரீபெய்ட் திட்டம் ஹார்டி கேம்ஸ், அரினா கேம்ஸ், கேமோன் ஆஸ்ட்ரோடெல், கேமியம், லிஸ்ட்ன் போடோகாஸ்ட், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். எனவே நீங்கள் BSNL ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252GB டேட்டா பலன் கிடைக்கும்.
இந்த BSNL ரூ.599 திட்டம் குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. இந்த அற்புதமான BSNL ப்ரீபெய்ட் திட்டம் Zing, PRBT மற்றும் Astrotell, WOW என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல நன்மைகளையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் இரண்டு திட்டங்களில் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும்.
அதிர்ந்த சந்தை.. 50MP கேமரா, AMOLED டிஸ்ப்ளே.. Samsung 5G போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை அதிர்ச்சியில் சந்தை.. 50MP கேமரா, AMOLED டிஸ்ப்ளே.. Samsung 5G போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை
இதேபோல், நிறுவனம் சமீபத்தில் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தம் 90ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
மேலும் பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post