மொபைல் ஆப் மூலம் க்யூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் யுபிஐ (UPI) பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு, 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பல முக்கியமான பணப்பரிவர்த்தனைகளுக்கு உதவக்கூடிய ஒரு மாற்றமாகும்.
உச்சவரம்பின் இந்த உயர்வானது குறிப்பாக கல்விச் சேவைகள், மருத்துவமனை கட்டணங்கள், வரி செலுத்துதல், மற்றும் அரசு நிதி பத்திரங்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு பொருந்தும். இதன் மூலம் பொதுமக்கள் இலகுவாக பெரும் தொகைகளை QR குறியீட்டின் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது, எனவே, இனி பெரும் தொகைகளை பரிமாறும் போது யுபிஐ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாற்றம் UPI பரிவர்த்தனைகளின் பயனர்கள் மற்றும் அதன் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post