ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் கிரிஷ் 4 குறித்து புதிய தகவல்!
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான “கிரிஷ்” படம் சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பாகங்களும் உருவாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, 2013ஆம் ஆண்டு வெளியான “கிரிஷ் 3”, வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு, “கிரிஷ் 4” குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால், 10 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், “கிரிஷ் 4” குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 700 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாகவும், இந்த உயர்ந்த தயாரிப்பு செலவு காரணமாக எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இதை தயாரிக்க முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை யார் இயக்குவார்கள் என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதனால், “கிரிஷ் 4” இன்னும் தாமதமாகும் வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கருதப்படுகிறது.