தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்பதற்குப் பதிலாக விஜய் மக்கள் இயக்கம் என்று பதிவு செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கஞ்சானி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி படம் வெளியாவதற்கு முன் நோட்டீஸ் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டால், அவற்றை ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பதிவு செய்யாமல், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என பதிவு செய்ய வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வெற்றிக் கழகம் அரசியல் கட்சி என்பதால், கட்சி பெயரை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், படங்களுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Discussion about this post