தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் படங்களை ஆய்வு செய்து வெளியிடுவதாக நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கிய, ‘IC 814: The Kandahar Hijack’ என்ற வெப் சீரிஸ் ஆகஸ்ட் 29 அன்று Netflix இல் வெளியிடப்பட்டது. 1999 இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியதன் அடிப்படையில், பயங்கரவாதிகளுக்கு இந்துப் பெயர்கள் சூட்டப்பட்டதால் இந்தத் தொடர் சர்ச்சையைக் கிளப்பியது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நெட்ஃபிக்ஸ் இந்தியா தலைவர் மோனிகா ஷெர்கிலுக்கு விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, நேரில் ஆஜரான மோனிஷா ஷெர்கில், எதிர்காலத்தில், தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று விளக்கினார்.
Discussion about this post