நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என இதய சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வெடியன் நடித்து வரும் உன கூலி திரைப்படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமில்லை என அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என இருதயவியல் துறை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருவதாகவும், இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேவைப்பட்டால் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post