நடப்பு ஐபிஎல் பருவத்தின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் எதிராளியாக மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. இந்த சூழலில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் favor ஆகிறது என்றால் அது ஏன்?” என்கிற கேள்வியை கிரிக்கெட் வீரர் அஸ்வின் எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்றாகும். இந்த ஐந்து கோப்பைகளையும் அந்த அணிக்கு வெற்றி சேர்த்து தந்தவர், கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா. இருப்பினும் 2024-ம் ஆண்டு சீசன் தொடங்கி, ஹர்திக் பாண்டியாவே அணி தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.