மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்கதேச அணிகள் விளையாடின.
இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக நிகர் சுல்தானா 48 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபோதனி, பிரியதர்ஷினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களம் இறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்னே மற்றும் சமரி அதப்பத்து ஆகியோர் களம் இறங்கினார்கள். அதபது 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்ஷிதா சமரவிக்ரம களம் இறங்கினார். விஷ்மி குணரத்னவும், ஹர்ஷிதா சமரவிக்ரமவும் நிதானமாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதில், ஹர்ஷித சமரவிக்ரம 33 ரன்களிலும், விஷ்மி குணரத்னே 51 ரன்களிலும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து கவிஷா தில்ஹாரியும், ஹாசினி பெரேராவும் களம் இறங்கினார்கள். இறுதியில் இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை தொடங்கியது.