WhatsApp Channel
குண்டுவெடிப்பில் இறந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு மையத்தில் இன்று காலை குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ள நிலையில், கேரளா குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த என்ஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், “குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் பலத்த காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அடையாளம் காண வேண்டும்.”
Discussion about this post