தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து சுமார் 3.5 மணி நேரத்திற்குப் பிறகு நள்ளிரவு 12.50 மணியளவில் வீட்டிற்கு வந்தது. வாகனத்தின் முன்னும் பின்னும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் அவரது ஆதரவாளர்கள் கதறி அழுதனர்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, மர்ம கும்பல் 8 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் 8 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் 8 பேர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தகவல் வெளியானது.
ஆனால் அவர்கள் 8 பேரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியினரும் மருத்துவமனை முன்பு திரண்டு கொலையாளிகளை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று இரவு 9 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதித்தால் மட்டுமே வாங்குவோம் என அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். பின்னர் அவரது உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் பழைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து சுமார் 3.5 மணி நேரத்திற்குப் பிறகு நள்ளிரவு 12.50 மணியளவில் வீட்டிற்கு வந்தது. வாகனத்தின் முன்னும் பின்னும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் அவரது ஆதரவாளர்கள் கதறி அழுதனர்.
நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதற்காக நாளை காலை ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை பெரம்பூருக்கு கொண்டு செல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.