ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியா கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல்-ஷபாப், ஐஎஸ் போன்ற பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் மொகடிஷுவில் லிடோ கடற்கரை அருகே பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. அல் ஷபாப் பயங்கரவாதிகள் நேற்று இரவு ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தினர். ஹோட்டலுக்குள் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், ஓட்டலில் இருந்தவர்கள் சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர், தற்கொலைப் படையினர் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பணயக்கைதிகளை மீட்டனர். எனினும் இந்த தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post