டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கையை மீறிய வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கையும் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கெஜ்ரிவாலை அதிகாரப்பூர்வமாக சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், தன்னை சிபிஐ சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தவிர, சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி மற்றொரு மனுவையும் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post