மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மாணவி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. சுதன்ஷு திரிவேதி, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சந்தீப் போஷ், தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில் மற்றொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமித்ததை விமர்சித்தார்.
மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், இந்த வழக்கில் மேற்கு வங்க காவல்துறையின் விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post