டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
டெலிகிராம் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் மீது பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஆஜராகாத பாவெல் துரோவுக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது.
ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து பாரிஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள லு போர்கெட் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாதுகாவலர் மற்றும் பெண்ணுடன் வந்த பால் துரோவை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர்.