நிதி முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமந்துல்லா கான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வக்பு வாரியம் தொடர்பான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக எம்எல்ஏ அமத்துல்லா கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமத்துல்லா கான், தனக்கு எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனையின்போது, அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் டெல்லி போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அமதுல்லா கானை அமலாக்கத் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Discussion about this post