நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ., தமிழ்நாடு டி.ஜி.பி., க்கு ராஜினாமா கடிதம். எஸ்.ஐ., பணியை தீர்க்கமாக செய்ய விடாமல் காவல் ஆய்வாளர் தடுப்பதாக குற்றச்சாட்டு.
திருமதி. சங்கரலதா மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்களால் நிகழ்ந்த எனக் கருதப்படும் பாரபட்சமான நடவடிக்கைகள் மற்றும் தங்களை முறையாக பணிபுரிய அனுமதிக்காத சூழ்நிலை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தங்களின் புகார் பதிவு.
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஆஷா ஜெபகர் நான் பணிபுரிந்து வருகிறேன். மேற்படி காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் உட்பட 36 காவல் ஆளிநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 05.08.2024 A C.No. Α3/731/2024 D.O.No.-541/2024 பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் WSSI-2519 திருமதி.சங்கரலதா என்பவர் கோட்டார் காவல் நிலையத்திலிருந்து 17.08.2024 ம் தேதி பணிமாறுதலாகி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்தார்.
இவர் நிலையம் வந்த நாள் முதல் வெளி மாவட்ட பாதுகாப்பு பணிகளுக்கு WSSI 2519 திருமதி. சங்கரலதா தனக்கான வரிசை வந்த பிறகும் பணிக்கு செல்லவில்லை. எந்தவிதமான பணிக்கும் காவல் ஆளிநர்களை பாரபட்சமில்லாமல் வரிசை பிரகாரம் அனுப்பும் காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் (WSSI 2519) திருமதி. சங்கரலதா என்பவர் மீது மட்டும் பணிநியமனம் செய்வதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். ஆய்வாளர் அவர்கள் நான் (SIஆஷா ஜெபகர் நிலையத்தில் இல்லாத நேரத்தில் வரும் புகார்தாரர்களிடம் (WSSI – 2519) திருமதி. சங்கரலதாவை உதவி ஆய்வாளரென அறிமுகபடுத்துகிறார்.
கடந்த 31.08.2024-ம் தேதி மாலை 18:30 மணியளவில் நான் Child line லிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் படி 2 சிறுவர்களை சாதாரண உடையில் அமர்ந்து விசாரணை செய்து அறிவுரை வழங்கி அனுப்பினேன். பின்னர் நிலையத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள காவலர் ஓய்வு அறைக்கு சென்று Refresh ஆகிவிட்டு நிலையத்தின் தரைதளத்திலுள்ள உதவி ஆய்வாளர் அறைக்கு திரும்ப வந்த போது (WSSI 2519) திருமதி. சங்கரலதா என்பவர் மேற்படி அறையில் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து மறவன் குடியிருப்பு சென்னவண்ணான்விளையை சேர்ந்த சுபாஷ் மனைவி சகாயசாலினி தனது கணவர் மீது கொடுத்த புகார் மனுவை விசாரித்துக் கொண்டிருந்தார்.
நான் மேற்படி பெண் சிறப்பு உதவி ஆய்வாளரிடம் ஏன் உதவி ஆய்வாளர் அறையிலுள்ள உதவி ஆய்வாளருக்கான இருக்கையில் அமர்ந்து புகார் மனு விசாரிக்கிறீர்கள் என கேட்டதற்கு தான் காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து புகார் மனு விசாரிப்பதாக என்னிடம் தெரிவித்தார். உடனே நான் மேற்படி விவரத்தினை காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறையிலிருந்த காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்களிடம் நேரடியாக தெரிவித்தேன். அதற்கு காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் நான் கூறிய விவரத்தினை உதாசீனபடுத்திவிட்டு பதில் எதுவும் கூறாமல் எனக்கு மருத்துவ விடுப்பு வாங்கி தருவதாக கூறினார்.
காவல் ஆய்வாளர் அவர்களின் இந்த அலட்சியமான பதிலால் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியை தீர்க்கமாக என்னால் செய்ய இயலவில்லை. நான் உடனே நாகர்கோவில் உட்கோட்ட அலுவலகம் சென்று உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மேற்படி விவரத்தினை நேரில் சென்று கூற முற்பட்டேன். அப்போது காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் உயரதிகாரிகளை சந்திக்க வேண்டுமெனில் ஆய்வாளர் அவர்களிடமிருந்து எழுத்து மூலமாக ஒப்புதல் பெற்ற பின்பே உயரதிகாரிகளை சந்திக்க வேண்டுமென்று தீர்க்கமாக கூறிய கட்டாயத்தின் பேரில் என்னால் எனது உயரதிகாரிகளை நேரில் சந்தித்து விவரத்தினை கூற இயலவில்லை.
ஆகவே காவல் நிலையத்தில் தன்னை உதவி ஆய்வாளராக பாவித்து கொண்டு காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உதவி ஆய்வாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டிருக்கும் (WSSI – 2519) திருமதி. சங்கரலதா என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன் என ஆஷா ஜெபகர்.
Discussion about this post