சாதியை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது…. துணை நிற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி …? கவலை மருத்துவர்கள் சங்கம் ….! The tendency to insult the caste is increasing …. Sub stands Minister Senthil Balaji …? Anxiety Physicians Association ….!
கொரோனா பணி தொடர்பாக ,தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித் அதிகாரிகளை சாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டும் போக்கும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டித்துள்ளது. மேலும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
இத்தகைய பிரச்சனை ஒன்றில், ஒரு தலித் மருத்துவ அதிகாரியை ,ஓர் இளம் வயது மருத்துவ அதிகாரி இழிவாக திட்டியதோடு ,சட்டையை பிடித்து அடித்தும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது. கொரோனா பணி தொடர்பாக ஒரு தலித் மருத்துவ அதிகாரிக்கும், மற்றோரு இளம் மருத்துவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் ,துறைவாரியாக பேசி உரிய தீர்வை காணாமல், தலித் மருத்துவ அதிகாரியை மட்டும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
அவரது கைதில் மேல்மட்டத் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை, தலித் மருத்துவர்கள், மருத்து அதிகாரிகள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தலித் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் அச்சத்தோடு , பாதுகாப்பற்ற சூழலில் பணி புரிய வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தலித் மருத்துவரை உடனடியாக விழுப்புரம் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். இந் நிகழ்வு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் மனித உரிமை ஆணையம் உடனடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். தமிழக சுகாதாரத்துறை இந்நிகழ்வு குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post