WhatsApp Channel
*விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விநாயகர் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடக தலைநகர் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள ஸ்ரீ சத்ய கணபதி கோயில் முழுவதும் 10 – 20 – 50 – 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாணயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதில், கரன்சி நோட்டுகளின் மதிப்பு ரூ.2.18 கோடி; நாணயங்களின் மதிப்பு 70 லட்சம் ரூபாய்.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஆலயத்தை பிரத்யேக பாணியில் அலங்கரித்து வரும் ஸ்ரீ சத்திய கணபதி ஆலய நிர்வாகம் இம்முறை கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.
இது குறித்து கோவில் அறங்காவலர் மோகன் ராஜு கூறுகையில், ”கோயில் முழுவதும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்கரிக்க, மூன்று மாதங்கள் ஆனது.
திருவிழா முடிந்ததும், கரன்சி நோட்டுகள், நாணயங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்,” என்றார்.
Discussion about this post