WhatsApp Channel
‘அயோத்தியில் அக். 17ல் துவங்கவுள்ள ராம்லீலா வைபவம் சமூக வலைதளங்களில் 14 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் ஆண்டு தோறும் நடக்கும் ராம்லீலா வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான ராம்லீலா நிகழ்ச்சி அக். 17ல் துவங்கி 25ம் தேதி வரை நடக்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. முக்கிய பிரமுகர்கள் கோவில் நிர்வாகிகள் விழாக் குழுவினர் மட்டும் பங்கேற்பர். இந்த ஆண்டு உற்சவம் நடத்தும் பொறுப்பு டில்லியில் உள்ள ராம்லீலா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதன் இயக்குனர் சுபாஷ் கூறியதாவது:இந்த ஆண்டு ராம்லீலாவில் பக்தர்கள் பங்கேற்க இயலாது என்பதால் நிகழ்ச்சிகள் அனைத்தும் ‘யு – டியூப்’ உட்பட பல்வேறு சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பாகும். உருது உட்பட 14 மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏதேனும் ஒரு நாளில் விழாவில் பங்கேற்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post