WhatsApp Channel
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் அக்., 16 முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் திறக்கப்படும் அக்.,16ம் தேதி எந்தவித சிறப்பு பூஜையும் நடக்காது. அக்., 17 முதல் 22ம் தேதி வரையிலான 5 நாட்களில் சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெறும். கடும் கட்டுப்பாடுகளுடன் நாள் ஒன்றுக்கு 250 பேர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post