WhatsApp Channel
திருப்பதியில் கொரோனா பாதிக்கப்பட்ட தேவஸ்தான ஊழியர்களில் 402 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆந்திராவில் கொரோனா தொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஜூன் மாதத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். கடந்த 2 மாதங்களில் திருப்பதியில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட 743 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோய் தொற்றில் இருந்து 402 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 338 பேர் தனியார் மையங்களிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஊழியர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
திருப்பதியில் ஜூலையில் சுமார் 2.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறுகையில், திருமலையில் 743 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். கோவிலில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது. ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக 16 கோடியே 19 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 11.35 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
Discussion about this post