WhatsApp Channel
தற்போது 92 வயதை எட்டியுள்ள அத்வானி நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்ற மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், “எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நாள்” என பாஜக மூத்த தலைவரான எல்.கே அத்வானி தற்போது கூறியுள்ளார்.
ராமர் கோயில் கட்டுவது குறித்து அத்வானி பல ரத யாத்திரிகளை நடத்தியுள்ளார். ராமர் கோயில் அமைவதற்கு தியாகங்களை மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூருகிறேன் என அத்வானி தற்போது ஒரு வீடியோ வாயிலாக கூறியுள்ளார்.
தற்போது 92 வயதை எட்டியுள்ள அத்வானி நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்ற மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post