WhatsApp Channel
அயோத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என ராம ஜன்ம பூமி அறக்கட்டளை தலைவர் தெரிவித்தார்.
இது குறித்து ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும். என்றைய தேதி என்பது குறித்து இன்று (18 ம்தேதி) நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
மேலும் கோவில் கட்டுமான பணி துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனது அழைப்பை ஏற்று பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என நம்புகிறேன். கோவில் கட்டுமான பணி துவக்க விழாவை ஆன்லைனிலோ அல்லது வீடியோ கான்பரன்சிங் முறையிலோ நடத்த விரும்பிவில்லை. நிகழ்ச்சிக்கு பிரதமர் நேரிடையாக வருவார் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.
[youtube https://www.youtube.com/watch?v=wm4mvEDmqw0?rel=0]
Discussion about this post