WhatsApp Channel
ஆந்திராவிலுள்ள புகழ்மிக்க சிவாலயமான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று (ஜூன் 15) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புகழ்மிக்க காளஹஸ்தி தலத்தில் இன்று முதல் பக்தர் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சோதனை முறையில் முதலில் கோவில் ஊழியர்கள், செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். புதன்கிழமை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராகு கேது பூஜை மட்டும் நடைபெறும் என்றும் மற்ற பூஜைகளை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 8 ம் தேதி முதல் திருப்பதி உள்ளிட்ட அனைத்து கோவில்களும் ஆந்திராவில் திறக்கப்பட்டன. . ஆனால், ஸ்ரீகாளஹஸ்தி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா உறுதியானதால் இக்கோவில் மட்டும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post