குமரி அனந்தன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் மக்களவை உறுப்பினரும் தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதியுமான குமரி அனந்தன் அவர்கள் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்,
“குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிக்க சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் போற்றுதற்குரியவை. அவரது மறைவு வேதனையளிக்கிறது.“
என்றும் குறிப்பிட்டார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
இதனுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, அவரது சகோதரரின் மறைவுக்காக ஆறுதல் தெரிவித்தார்.