ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர், அளித்த நேர்காணலில், எந்த ஒரு நாடும் எவ்வாறு ஒரு முயற்சியில் பங்கேற்க வேண்டும், என்று அளவிடுவது ரஷ்யாவின் பணி இல்லை. பிற நாடுகளுடன் தங்களின் உறவை மேம்படுத்த வேண்டும். ஆனால் எந்த ஒரு உறவும் எவருக்கும் எதிராக நண்பர்களை உருவாக்கும் விதமாக இருக்கக்கூடாது.
இந்தியா மற்றும் சீனாவுடனான ரஷ்யாவின் நட்பில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் சிக்கல்கள் உள்ளது என்பது எனக்கு தெரியும்.
அண்டை நாடுகளுக்குள் வழக்கமாக பிரச்சனைகள் இருக்கும். எனினும் இந்திய பிரதமரும் சீன அதிபரும் பழகும் விதங்கள் எனக்கு தெரியும்.
இருவரும் பொறுப்பான தலைவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் மிகுந்த மதிப்புடன் நடத்துகிறார்கள். அவர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எப்போதும் சரியான தீர்வு காண்பார்கள் என்று நினைக்கிறேன். இருவரும் திறமையானவர்கள். ஆனால் அதில் வேறு எந்த சக்தியும் தலையிடாமல் இருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு வேகமாக முன்னேறி வருகிறது. அது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்திய நண்பர்களுடனான இந்த அதிகப்படியான ஒத்துழைப்பை வெகுவாக பாராட்டுகிறோம். பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை தொடர்பில் இந்தியாவுடன் எங்களின் உறவு ஆழமாகவே உள்ளது.
மேலும் இந்தியாவில் தொழில்நுட்பங்களும், மேம்பட்ட ஆயுத அமைப்புகள் உற்பத்தி செய்வதில் அவர்களுடன் சேர்ந்து செயல்படும், ரஷ்யாவின் ஒரே நண்பன் இந்தியா தான். எங்களது ஒத்துழைப்பு என்றும் முடியாது. ஏனெனில் அது பன்முகத்தன்மை உடையது என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post