நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு மத்தியில் சிலிண்டர் விலை அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.122 குறைக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூ.1, 595.50 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1, 473.50 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ரூ.1,603 ஆக உள்ளது.
மேலும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ.825 ஆக உள்ளது.
Discussion about this post