கல்வான் பள்ளத்தாக்கில் பலியானவர்களைப் பற்றிய தவறான தகவல் ..! இளைஞன் சிறையில் அடைப்பு …! Misinformation about the victims in Kalwan Valley ..! Youth imprisoned …!
கடந்த ஆண்டு இந்தியாவின் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள் சிலர் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் உயிர் இழந்தனர்.இதுபற்றிய தகவலை தவறாக சித்தரித்ததாக வாலிபர் ஒருவர் சீனாவில் கைது செய்யப்பட்டார்.38 வயதான க்யூஜிமிங் என்பவர் வெய்போ என்ற சமூக வலைதளத்தில் “இந்திய எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் இதனை சீன அரசு மறைக்கிறது” என பதிவிட்டிருந்தார்.அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை மூன்று மில்லியன் ஆகும். இவரது க்ரேயான் பால் எனும் கணக்கை சீன அரசு கடந்த பிப்ரவரியில் தடை செய்தது.
கிழக்கு மாகாணமான நாஞ்சிங் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அரசு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் “தியாகிகள் மற்றும் வீராங்கனைகளை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டிருக்கிறார்.இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நான்கு அதிகப்படுத்தி பதிவிட்டிருக்கிறார்.இது தேசத்தை அவமதிக்கும் செயல்” என குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜீன் 1 இன்று காலை க்யூஜிமிங்கிற்க்குஎட்டுமாத கடுங்காவல் தண்டனை அறிவித்தது.
இதுகுறித்து பேசிய ஒரு அதிகாரி”2018ல்தியாகிகள் மற்றும் வீராங்கனைகளை அவதூறு செய்வதை தடைசெய்யும் குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது.”தியாகிகள் மற்றும் வீராங்கனைகளை அவதூறு செய்வதை” தடைசெய்யும் சீனாவின் குற்றவியல் சட்டத்தின் புதிய ஏற்பாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நபர் இவர்தான்.கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் இந்தியாவிற்கும் இடையிலான மிக மோசமான எல்லை மோதலாகும்.
இறந்தவர்கள் மரணத்திற்குப் பின் “எல்லையைக் காக்கும் ஹீரோக்கள்” என்று கௌரவிக்கப்பட்டனர்.சமூக ஊடக இடுகைகளில் இது போன்ற தவறான தகவல்களை பரிமாறுவதால் தேச நன்மைக்கு குந்தகம் ஏற்படுகிறது.மேலும் கியுஜிமிங் “ஹீரோக்கள் மற்றும் தியாகிகளின் நற்பெயர் மற்றும் கௌரவத்தை அவமதித்துள்ளார். அவர் செய்த குற்றங்களை நீதிமன்றத்திலும் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்..இந்தியாவிலும் இதுபோன்ற சட்டங்கள் வருமா என தேச அபிமானிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post