1500களில் மகராஷ்ட்ராவுக்கும் கன்னடத்துக்கும் இடைபட்ட அந்த பகுதி கோமண்டா, கோமந்த்சலா என பல பெயர்களில் வழங்கபட்டதுமான அப்பகுதி போர்துகீசியர் கைகளுக்கு சென்று கோவா என்றாயிற்று
மொகலாய பேரரசிடம் அனுமதிபெற்று அதை வாஸ்கோடமாகா ஆள தொடங்கினான், பின்னாளில் அது கிறிஸ்தவர்களின் தலமை இடமாயிற்று, இந்திய கிறிஸ்தவம் அங்குதான் தொடங்கிற்று
வரலாற்றில் மிக கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றான, ஹிட்லரின் யூதவெறிக்கு சற்றும் குறையாமல் இந்துக்களுக்கு எதிராக போர்த்துகீசியர் செய்த மிக கடுமையான அட்டகாசங்கள் அங்குதான் அரங்கேறின
இன்றுள்ள பிராமண துவேஷம் முதல், இந்துக்கள் சாத்தான்கள் என்பதெல்லாம் அங்குதான் தொடங்கிற்று
வீரசிவாஜி அவர்களை அடக்கி வைத்திருந்தான், பின்னாளில் பிரிட்டிஷார் அவர்களை கண்டும் காணாமலும் விட்டு வைத்தனர்
கத்தோலிக்கர்களான போர்த்துகீசியரின் அட்டகாசம் அல்லேலூயா பிரிட்டிஷ்காரன் வந்தபின் குறைந்தது, சென்னையினை பிரிட்டிச்சாரிடம் விட்டு கொடுத்த போர்ச்சுக்கல் கோவாவினை தன் பிடியில் வைத்து கொண்டது
மதம் அன்பான கிறிஸ்தவம் எனினும் குடியும் கும்மாளமும் சூதாட்டமும் அவர்களின் இயல்பாக இருந்தது, ஒரு மாதிரியான இனமாக கோவாவில் ஆட்டம் போட்டார்கள், அதன் பாதிப்பு இன்றும் உண்டு
சுமார் 450 ஆண்டு காலம் ஆண்ட அவர்களை பட்டேல் விரட்ட எண்ணினாலும் நேரு அதை அனுமதிக்கவில்லை
கோவா விடுபட்டால் இந்தியா கிறிஸ்தவத்துக்கு பெரும் பின்னடைவு நேரும் என்ற போர்ச்சுக்கலின் கோரிக்கையினை அப்படியே ஏற்றார் நேரு
இவ்வளவுக்கும் கோவாலிலும் இந்தியாவோடு சேரவேண்டும் என்ற போராட்டம் நடந்தது ஆனால் போர்ச்சுகல் அடக்கியது நேரு அதை வேடிக்கை மட்டும் பார்த்தார்
நேருவின் ஒருங்கிணைந்த இந்திய கொள்கை இப்படித்தான் இருந்தது
1950க்கு பின்னும் கோவாவினை கைபற்ற நேரு விரும்பவில்லை பட்டேலுக்கும் அனுமதி கொடுக்கவில்லை
1961ல் சீன போர் வந்தபொழுதுதான் அதன் ஆபத்து நேருவுக்கு புரிந்தது, அவரின் அறிவுக்கு எல்லாமே அவருக்கு கொஞ்சம் தாமதமாகவே விளங்கும்
ஆம் கோவா தனிநாடாக நீடிக்கும் பட்சத்தில் இன்னொரு நாடு அங்கு கால்பதிக்கும் ஆபத்து வந்தது, நேரு அலறியது அப்பொழுதுதான்
வேறு வழியின்றி இந்தியாவோடு கோவா 1961ல் இணைந்தது, பின் 1987ல் தனி மாநிலமாயிற்று
இன்று அந்த மக்கள் தாங்கள் இந்தியாவோடு இணைந்த நாளை கொண்டாடுகின்றார்கள், ஆனால் அதற்கு முழு முதல் காரணம் சீனா
ஆம், சீனா இந்தியாவுக்கு செய்த உதவிகள் நிறைய உண்டு, அதில் முக்கியமானது நேரு எவ்வளவு அலட்சியமான பிரதமராய் இருந்தார் என்பதை இந்தியருக்கு சுட்டி காட்டியது
Discussion about this post