தற்போது இந்தியா உள்பட பல நாடுகளில் கொரனோ இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த இரண்டாவது அலை எப்போது முடிவுக்கு வரும்? மூன்றாவது அலை எப்போது தொடங்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறிய தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.
சரியான அளவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடவில்லை என்றால் இரண்டாவது அலை இப்போதைக்கு முடியும் வாய்ப்பு இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுவரை இந்தியாவில் 12 சதவீத மக்களுக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளதாகவும் இன்னும் 80 சதவீதத்திற்கும் மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றும் எனவே இந்த விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இரண்டாவது அலை முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதே ரீதியில் தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடந்தால் கண்டிப்பாக இன்னும் இரண்டு மாதங்கள் கொரனோ இரண்டாவது அலை இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் மூன்றாவது அலை எப்போது வரும் என்று இப்போதைக்கு தெரியாது என்றும் ஆனால் கண்டிப்பாக மூன்றாவது அலை வரும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசிகளை சரியான அளவில் பயன்படுத்தி சுமார் 80 சதவீத மக்களுக்கு போட்டு விட்டால் மூன்றாவது அலை வருவதை தள்ளிப்போடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அனேகமாக அடுத்த வருடம் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post