உத்தரபிரதேச மாநிலத்தில் ஆமபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்டவர் தேவேந்திர பிரதாப்சிங் ( 55) இந்த தேர்தலில் வெற்றி பெற்றதால் சட்டமன்றத் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் .மேலும் மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார் .இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அமபூர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அங்கு பரிசோதனை செய்த தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார் .இதனால் தேவேந்திர பிரதாப்சிங் மறைவையொட்டி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் செய்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார் .
மேலும் மாரடைப்பால் உயிரிழந்த தேவேந்திர பிரதாப்சிங்கின் உடலை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ஈடுபட்டுவருகின்றனர்
Discussion about this post