இந்தியாவில் கள்ள நோட்டுகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ஆம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தது.
இதற்குப் பதிலாகப் பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய 500 ரூபாயும், 2000 ரூபாயும் மற்றும் பல ரூபாய் நோட்டுகள் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து அறிமுகம் செய்தது.
ஆனால் வெறும் 4 வருட காலத்தில் இந்தியாவில் கள்ள நோட்டுப் புழக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
500 ரூபாய் கள்ள நோட்டு
இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகளவிலான கட்டுப்பாடுகள் மூலம் 29.7 சதவீதம் குறைக்கப்பட்டு இருந்தாலும், 500 ரூபாய் கள்ள நோட்டுப் புழக்கம் 31 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகள்
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து 10 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையில் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புதிதாக அறிமுகம் செய்து, பழைய ரூபாய் நோட்டுகளை மெல்ல மெல்ல புழக்கத்தில் இருந்து நீக்கி வரும் காரணத்தால் மொத்தமாகக் கள்ள நோட்டுப் புழக்கத்தில் இருந்து குறைந்துள்ளது.
பாதுகாப்பு நிறைந்த ரூபாய் நோட்டுகள்
ஆனால் புதிதாக வெளியிடப்பட்டு உள்ள 500 ரூபாய் நோட்டுகள் கள்ளச் சந்தையில் அச்சிடமுடியாத வகையில் பல பாதுகாப்புகள் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்து வெளியிட்ட மத்திய அரசுக்கு இது அதிர்ச்சியாக உள்ளது.
30,054 கள்ள நோட்டுகள்
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் புதிய 500 ரூபாயின் கள்ள நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கம் அதிகரித்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் 30,054 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிப்பிட்ட நிலையில் 2020-21 நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 39,453 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள்
2019ல் மட்டும் 287,404 கள்ள நோட்டுகள் National Crime Records Bureau (NCRB) கைப்பற்றப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை விடவும் 11 சதவீதம் அதிகமாகும். இதன் மொத்த மதிப்பு மட்டும் 25.3 கோடி ரூபாய்.
500 ரூபாய் நோட்டுகள் ஆதிக்கம்
மேலும் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் மொத்த ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் மட்டும் 68.4 சதவீதம், 2000 ரூபாயும் சேர்த்தால் 85.7 சதவீதம். இந்நிலையில் நாட்டில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ள ரூபாய் நோட்டுகள் அதிகரித்துள்ளதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
Discussion about this post