இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.86- லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 44 நாட்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் சரிந்து 23 லட்சத்து 43 ஆயிரத்து 152- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 76,755 குறைந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 459- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 48 லட்சத்து 93 ஆயிரத்து 410- ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90.34- சதவிகிதமாக உள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 10.42-சதவிகிதமாகவும் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 9 சதவிகிதமாகவும் உள்ளது. கடந்த 4 நாட்களாக தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
Discussion about this post