கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து வரும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விரைவில் அவரவர் குடும்பங்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணி புரிவோர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அது போன்றவர்களின் குடும்பங்கள் மிகவும் மீளாத்துயரத்திற்கு செல்லப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பத்திரிகையாளர் நல திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் வரை கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளது.
பத்திரிகையாளர் மற்றும் ஊடக நல திட்ட கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post