கொரோனா வைரஸ் தொற்றால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19-ம் தேதியில் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எஞ்சியுள்ள 31 ஆட்டங்களை நடத்த 3 வார காலம் போதுமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 2ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அங்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி யுடனும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.
இதில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் செப்டம்பர் 14ல் மான்செஸ்டர் நகரில் முடி வடைகிறது.
இதன் பின்னர் அடுத்த நாளே ஒட்டுமொத்த இந்திய அணியும் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Discussion about this post