இவரை இந்தியா கொண்டுவர மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்டர்போல் அமைப்பின் உதவியை நாடி அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆன்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்திருந்த மெகுல் சோஸ்கியை காணவில்லை என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜான்சன் பாயிண்ட் காவல் நிலையத்தில் மெஹுலைக் காணவில்லை என புகார்.
கடந்த சில நாள்களாக அவரின் இருப்பிடம் குறித்து குடும்பத்தினர் கவலையில் உள்ளதாக முகுல் சோஸ்கியின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டுள்ள சிபிஐ, மெகுல் சோஸ்கி தொடர்பான தகவல் உறுதியாகும்பட்சத்தில், அடுத்தகட்ட நகர்வாக இன்டர்போல் அமைப்பை அணுகவுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை வியாபாரம் செய்துவந்த சோஸ்கி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி 13,5000 கோடி ரூபாய் அளவில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post