இந்தியா முழுவதுமிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் சீஃப் ஜஸ்டிஸ் என்வி.ரமணாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் வெஸ்ட் பெங்காலில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரங்களை கவனத்தில் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் SIT(Special investigation team) விசாரணை செய்து வழக்கு பதியுமாறும் வலியுறுத்தி உள்ளனர்.
அந்த கடிதத்தில் மேலும்.. இந்திய அரசியலமைப்புக்கு முரணாக மம்தா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மே 2 முதல் அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை பாலியல் அத்துமீறல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. காவல்துறையும் திரிணாமுல் குண்டர்களின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறது.
பல இடங்களில் நடந்த வன்முறை தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முதியவர் என்று பாராமல் கூட அடித்துக் கொன்ற அவலம் அங்கே நடைபெறுகிறது..பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே திரிணாமுல் குண்டரகளுக்கு சாமரம் வீசுகிறது.இன்று வரை பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஒரு வழக்கும் பதியப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
இதனை கவனத்தில் கொண்டு வெஸ்ட் பெங்கால் அல்லாத காவல்துறை அதிகாரிகளை கொண்டு தீர விசாரணை நடத்தி சொத்து சேதம் மற்றும் உயிர்பலிகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் மனித உரிமைகள் கழகம் தேசிய குழந்தைகள் உரிமைகள் கழகம் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் கழகம் ஆகியவை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்..மீடியா செய்திகளின் படி
வெஸ்ட் பெங்கால் கலவத்தில் சுமார் 15000 இடங்களில் வன்முறை நடந்தேறியிருக்கிறது. 15க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். 6000 முதல் 8000 வரையிலான மக்கள் சொந்த மாநிலத்திலிருந்து அகதிகளாய் புலம்பெயர்ந்துள்ளனர்.இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் வெஸ்ட் பெங்கால் முழுதும் ரோஹிங்யாக்களே வாழ முடியும்..மம்தாவின் தரம்தாழ்ந்த அரசியலுக்கு நாங்கள் எங்கள் உயிர்களை உடமைகளை இழக்கிறோம் என வெஸ்ட் பெங்கால் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச். ராஜா, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் கருத்து...
காங்கிரஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்தார். கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி...
பூஜைகள் மற்றும் வழிபாட்டின் போது, சில பூக்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன. இதற்கு வேதங்கள், பரம்பரை நம்பிக்கைகள், மற்றும் பண்பாட்டு குறிப்புகள் ஆகியவை முக்கிய...
Discussion about this post