இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (மே 25) வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, புதிதாக 1,96,427 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,69,48,874-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 25,86,782 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 3,511 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,07,231 -ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 3,26,850 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,40,54,861-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post