யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்த ரபிரதேச அரசு கொரோனா தொற்று மாநிலத்தில் பரவுவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் நோய்க்கிருமிகள் பரவுவதைக் கட்டுப்படுத்த, மாநிலத்தில் பா.ஜ.க அரசு பல்வேறு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. அதில் சமீபத்தியது ‘மேரா கான், கொரோனா முக்த் கான்’ என்று கிராமங்களை கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவையாக அறிவிக்கும் பிரச்சாரம் ஆகும்.
இதன் மூலம் சிறப்பாக செயல்படும் மூன்று கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு பல்வேறு வெகுமதிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அனைவரும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிராமங்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக முதலமைச்சர் சார்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் ” கிராமப் புறங்களில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் புதிதாக இரண்டு புதிய பிரச்சாரங்களை தொடங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்”.
இந்தப் பிரச்சாரம் மூலம் கிராமங்களில் கொரோனா தொற்று ஏற்படுவதை குறைத்து கொரோனா தொற்று இல்லாத கிராமங்களாக அறிவிக்க வழிவகை செய்யும் என்றும் இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் கிராமங்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்படும் கிராமங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post